Published:Updated:

Dhoni 41: ரொனால்டோ ஃபேன்; சச்சின் சொன்ன அந்த முடிவு - தோனியைப் பற்றிய 41 சுவாரஸ்யத் தகவல்கள்!

MS Dhoni

ஒரே 'ஒரு நாள் போட்டியில்' 10 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய வீரர் தோனி.

Dhoni 41: ரொனால்டோ ஃபேன்; சச்சின் சொன்ன அந்த முடிவு - தோனியைப் பற்றிய 41 சுவாரஸ்யத் தகவல்கள்!

ஒரே 'ஒரு நாள் போட்டியில்' 10 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய வீரர் தோனி.

Published:Updated:
MS Dhoni

1. 2007-ம் ஆண்டு டி20 உலகப்கோப்பையின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஓடிவரும் நீண்ட முடியைக் கொண்ட தோனியின் உருவம் நம் நினைவுகளில் மிதக்கும், அந்த நீண்ட முடிக்கு ஆசை ஊட்டியது பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம்.

2. கால்பந்து விளையாட்டின் மீது தோனி கொண்ட காதல் உலகறியும். அவரின் ஃபேவரட் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

MS Dhoni
MS Dhoni

3. தோனி, தன் கிரிக்கெட் கரியரைத் தொடங்குவதற்கு முன்பு ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்டராக பணிபுரிந்துள்ளார்.

4. நம்ம தோனியின் சிக்னேசர் ஷாட் என்று கூறப்படும் ஹெலிகாப்டர் ஷாட்டை தன் நண்பர் சந்தோஷ் லாலிடம் கற்றுக்கொண்டாராம்.

5. இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனியை வழிநடுத்த பரிந்துரை செய்தது நம்ம 'காட் ஆஃப் கிரிக்கெட்' சச்சின் தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

6. 2007-ம் ஆண்டில் ஆசியா XI அணிக்காக விளையாடிய நம் கேப்டன் கூல் ஜெயவர்தனாவுடன் இணைந்து 218 ரன்களை சேர்த்து குவித்தனர்.

7. பாலிவுட்டின் முன்னணிப் பாடகரான 'கிஷோர் குமார்' அவர்களின் தீவிர ரசிகர் தோனி.

MS Dhoni
MS Dhoni

8. கொரோனா முதல் அலையின் போது தோனி ஸ்ட்ராபெரி பண்ணை ஒன்றை நிறுவினார். அதுகுறித்து அவர் பகிர்ந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலானது.

9. 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2011-ம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை, 2013-ம் ஆண்டு சாம்பியன் டிராபி என அனைத்து ஐசிசி டிராபிகளை இந்தியா வசமாக்கியவர் கேப்டன் தோனி.

10. தோனியின் கேப்டன்சியில் தான் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்தது.

11. பட்டர் சிக்கன், சிக்கன் பிரியாணி ஆகியவற்றை விரும்பி சாப்பிடுவாராம் தோனி.

12. ஒரே 'ஒரு நாள் போட்டியில்' 10 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய வீரர் தோனி.

13. 2009 - 2022 வரை அதிக ஐ.பி.எல் போட்டிகளில் களமிறங்கியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் தோனி.

MS Dhoni
MS Dhoni

14. தீவிர பைக் காதலரான தோனி, யமகா ஆர்.எக்ஸ் 135 தொடங்கி கவாஸகி நின்ஜா எச்2 என 100-க்கும் மேற்பட்ட பைக்குகளை கலெக்ட் செய்து வைத்திருக்கிறார்.

15. தன் முதல் ஆட்டத்தை டக் அவுட்டில் தொடங்கிய தோனி கரியரின் முடிவில் 15,000-க்கும் மேற்பட்ட இண்டர்நேஷனல் ரன்களை குவித்துள்ளார்.

16. தோனி தலைமை வகித்த சிஎஸ்கே அணி இதுவரை ஆறு முறை ஃபேர் பிளே விருதுகளை வென்றுள்ளது.

17. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் இருமுறை சாம்பியம் பட்டம் சென்னையின் எஃப்சியின் இணை உரிமையாளராக பங்கு வகிக்கிறார் தோனி.

MS Dhoni
MS Dhoni

18. தோனியைப் பாராட்டி மத்திய அரசு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற விருதுகளை வழங்கி கெளரவித்திருக்கிறது. 2007-ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதினையும் பெற்றுள்ளார்.

19. பைக் கலெக்‌ஷன்களைத் தொடர்ந்து, டோலிவுட் நடிகர் நாகர்ஜூனாவுடன் இணைந்து மாஹி ரேசிங் நிறுவியுள்ளார் தோனி.

20. கிரிக்கெட், ஃபுட்பால் தவிர்த்து தோனிக்கு பாட்மிண்டன் விளையாடுவது மிகவும் பிடிக்கும்.

21. இந்தியாவுக்காக 200 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார் தோனி.

22. 2007, 2009, 2010, 2012, 2014, 2016 என ஆறு டி20 உலகப் கோப்பைகளில் கேப்டன் பதவி வகித்த ஒரே கேப்டன் தோனிதான்.

MS Dhoni
MS Dhoni

23. இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னல் என்கிற கவுரவ பதவிக்குச் சொந்தக்காரர் தோனி.

24. ஹாக்கி இந்தியன் லீக் போட்டியில் பங்கேற்கும் 'ராஞ்சி ரேஸ்' டீமின் உரிமையாளர் நம்ம தல தோனிதான்.

25. 38 வயதிற்கு மேல் கடந்தும் உலகக் கோப்பை போட்டியில் விளையாடியவர்கள் இரண்டே இந்தியர்கள்தான். அதில் ஒருவர் தோனி.

26. ஐபிஎல் தொடரில் அதிக முறை பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள அணி தோனி தலைமையிலான சிஎஸ்கேதான்.

27. 'Definitely Not' என்று கூறி ஐ.பி.எலின் 15 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான்காவது கோப்பையை வென்று தந்தார் தோனி.

28. 7-வது விக்கெட்டிற்காக களமிறங்கி ஒருநாள் போட்டிகளில் இரண்டு சதங்களை விளாசிய ஒரே வீரர் தோனி தான்.

MS Dhoni
MS Dhoni

29. ஏர் இந்தியாவில் இணைந்து 2009-ம் ஆண்டு நடைபெற்ற ஏர் இந்தியா சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்றார் தோனி.

30. டி.ஆர்.எஸ் முறையில் நாட்டமில்லாதவர் தோனி. இந்திய பந்து வீச்சாளர்கள் பலர் தோனியிடம் ஆலோசனை கேட்ட பிறகு தான் டி.ஆர்.எஸ் முறைக்கு செல்வார்கள், அதனாலே இது தோனி ரிவ்யூ சிஸ்டம் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.

31. ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் கேப்டன்ஸி செய்த ஒரே வீரர் தோனி தான்.

32. ஐபிஎல் தொடரில் 40-ம் மேல் பேட்டிங் சராசரி வைத்திருக்கும் இந்திய வீரர்கள் இருவர் தான், அதில் ஒருவர் தோனி.

33. முதலாவது ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வீரர் தோனியே.

MS Dhoni
MS Dhoni

34. டி20 போட்டியில், 288 போட்டிகளில் கேப்டன்ஸி செய்து அதிக டி20 போட்டிகளை கேப்டன்ஸி செய்த கேப்டன்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார் தோனி.

35. இந்திய அணியின் 28 ஆண்டு கால உலகக்கோப்பை கனவை 2011-ம் ஆண்டு நனவாக்கினார்.

36. ஒரு நாள் போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட ஸ்டம்பிங்களைச் செய்த ஒரே விக்கெட் கீப்பர் தோனி.

37. சர்வதேச போட்டிகளில் விக்கெட் கீப்பராக 829 விக்கெட்களை சாய்த்துள்ளார் தோனி. விக்கெட் கீப்பராக அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் தோனிக்கு மூன்றாவது இடம்.

38. டெஸ்ட் ஃபார்மர்ட்டில் 4000 ரன்களை குவித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் தோனி.

MS Dhoni
MS Dhoni

39. 5,6,7 வது விக்கெட்டில் களமிறங்கி ஒரு நாள் போட்டியில் 8000 ரன்களை கடந்த ஒரே வீரர் தோனி.

40. டிசம்பர் 30, 2014 அன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்தும், 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ஒரு நாள் மற்றும் டி20 போட்டியிலிருந்தும் தன் ஓய்வை அறிவித்தார் தோனி.

41. ஜுலை 10, 2019 அன்று தன் கடைசிப் போட்டியில் களம் கண்டார் தோனி . துரதிஷ்டவசமாக அன்று நிகழ்ந்த ரன் அவுட் தான் இன்று வரை பலரின் மனங்களில் ஆறாத வடுவாக இருந்து வருகிறது.