Published:Updated:

காட்சிக்கு வருகிறது தோனி பயன்படுத்திய ஒரு கோடி மதிப்புள்ள பேட்!

Vikatan Correspondent
காட்சிக்கு வருகிறது தோனி பயன்படுத்திய ஒரு கோடி மதிப்புள்ள  பேட்!
காட்சிக்கு வருகிறது தோனி பயன்படுத்திய ஒரு கோடி மதிப்புள்ள பேட்!

டந்த உலகக் கோப்பைத் தொடரின்  இறுதி ஆட்டத்தில் சிக்சர் அடித்து வெற்றி தேடி தந்த தோனியின் 'பேட்' டெல்லியில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.

காட்சிக்கு வருகிறது தோனி பயன்படுத்திய ஒரு கோடி மதிப்புள்ள  பேட்!

கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 274 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது-. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 48.2 ஓவரில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது. இந்திய கேப்டன் தோனி 91 ரன்களை எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். அதுவும் கடைசி பந்தை சிக்சருக்கு விளாசி இந்திய அணிக்கு வெற்றி தோடி கொடுத்தார்.

இந்த போட்டியில் விளையாட தோனி பயன்படுத்திய பேட் கடந்த 2011ஆம் ஆண்டு ஜுலை மாதம் 11ஆம் தேதி ஒரு லட்சம் பவுண்டுக்கு ஏலம் போனது. இது ஒரு கின்னஸ் சாதனை ஆகும். இந்த பேட்டின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ஒரு கோடி ஆகும். தற்போதைய நிலையில் உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள கிரிக்கெட் பேட் இதுதான்.இந்த பேட்டை டெல்லியை சேர்ந்த ஆர்.கே. குளோபல் என்ற நிதிநிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி அமீத் பக்சந்த்கா என்பவர் ஏலம் எடுத்துள்ளார். இவர் தோனியின் தீவிர ரசிகர் ஆவார்.


நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி விட்டது. வரும் 26ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் இந்திய அணி எதிர்கொள்கிறது. இதனால் கடந்த உலகக் கோப்பை வெற்றியை நினைவுபடுத்தும் வகையில் டெல்லியில் உள்ள பெங்காலி மார்க்கெட் பகுதியின் தோனி பயன்படுத்தி அந்த பேட் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இந்த பேட்டில் தோனியின் கையொப்பமிடப்பட்டிருக்கும்.

இது குறித்து அமீ த்பக்சந்தா கூறுகையில், ''இந்த பேட்டை நாங்கள் வேண்டுமானால் பணம் கொடுத்து வாங்கியிருக்கலாம். ஆனால் இது எப்போதும் தோனிக்கு சொந்தமானதுதான்'' என்றார்.