Published:Updated:

உயிரை பறித்த ரிவர்ஸ் கிக்... ரெஸ்லிங் வீரர் களத்திலேயே பலி!

Vikatan Correspondent
உயிரை பறித்த ரிவர்ஸ் கிக்... ரெஸ்லிங் வீரர் களத்திலேயே பலி!
உயிரை பறித்த ரிவர்ஸ் கிக்... ரெஸ்லிங் வீரர் களத்திலேயே பலி!

மெக்சிகோ நாட்டில் நடந்த ரெஸ்லிங் போட்டியில் களத்திலேயே வீரர் ஒருவர் மரணமடைந்தார்.
மெக்சிகோவில் ஜிசுவானா என்ற இடத்தில் ரெஸ்லிங் போட்டி நடைபெற்றது. இதில் பெட்ரோ அகுவாயோ ரமைர்ஸ் என்ற வீரரும் பங்கேற்றார். போட்டியின் போது எதிரணி வீரர் ஒருவர் அடித்த ரிவர்ஸ் கிக்கில் களத்தில் உள்ள ரிங்கிலேயே ரமைர்ஸ் மயங்கி சாய்ந்தார்.

அவர் படுகாயமடைந்திருப்பது சிறிது நேரம் கழித்துதான் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.