Published:Updated:

சச்சின் இன்னொரு 'பால்' ஆக்டோபஸ்?

Vikatan Correspondent
சச்சின் இன்னொரு 'பால்' ஆக்டோபஸ்?
சச்சின் இன்னொரு 'பால்' ஆக்டோபஸ்?

டந்த 2010 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது கிளி,ஆக்டோபஸ், யானை என பல விலங்குகளும் இந்த அணிதான் ஜெயிக்கும் அந்த அணிதான் ஜெயிக்கும் என்று ஆருடம் கூறும் வேலையில் ஈடுபட்டு வந்தன. இதில் ஜெர்மனி அருங்காட்சியத்தில் வாழ்ந்து வந்த, பால் என்ற ஆக்டோபஸ் கணித்தது மகச் சரியாக அமைந்தது.

2010ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின்& நெதர்லாந்து அணிகள் மோதின.இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணிதான் வெற்றி பெறும் என்று பால் கணித்தது. சிங்கப்பூரை சேர்ந்த மணி என்ற கிளி நெதர்லாந்துதான் கோப்பையை வெல்லும் என்று கூறியது. ஆனால் பால் ஆக்டோபஸ் கூறியது உண்மையானது. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை வென்றது. சிங்கப்பூர் மணி கிளியின் கணிப்பு பொய்யாகி போனது.

கடந்த 2012ஆம் ஆண்டு பால் ஆக்டோபஸ் இறந்து போனது. அதற்கு பின் ஜெர்மனி அருங்காட்சியகம் இன்னொரு பால் ஜுனியர் என்ற ஆக்டோபசை ஆருடம் கூற வைக்கும் முயற்சியில் இறங்கியது. ஆனால் பால் ஜுனியரால் எதிர்பார்த்தது போல கணித்து கூறமுடியவில்லை. தற்போதைய கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய முன்னாள் நட்சத்திரம் சச்சினும் பால் ஆக்டோபஸ்  போல துல்லியமாக கணித்துள்ளார்.

இந்த உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இந்திய அணிகள் மோதும் என்று சச்சின் கணித்திருந்தார். அதுபோல் மற்றொரு அரையிறுதியில் நியூசிலாந்து தென்ஆப்பிரிக்க அணிகள் மோதும் என்றும் கூறியிருந்தார். தற்போது சச்சினின் கணிப்பே சரியாக அமைந்துள்ளது. அதனால் சச்சினை இன்னொரு பால் என வருணிக்கின்றனர்.