Published:Updated:

சிக்சரில் டி வில்லியர்ஸ் அசத்தல்: பவுண்டரியில் சங்கக்காரா சக்கைப்போடு!

Vikatan Correspondent
சிக்சரில் டி வில்லியர்ஸ் அசத்தல்: பவுண்டரியில் சங்கக்காரா சக்கைப்போடு!
சிக்சரில் டி வில்லியர்ஸ் அசத்தல்: பவுண்டரியில் சங்கக்காரா சக்கைப்போடு!

லகக் கோப்பைத் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில், சிக்ஸர் அடிப்பதில் டி வில்லியர்சும், பவுண்டரி விளாசுவதில் சங்கக்காராவும் முதலிடம் பிடித்துள்ளனர்.

உலகக் கோப்பைத் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து விட்டன. இதில் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ், 6 போட்டிகளில் 20 சிக்சர்களை விளாசியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் 18 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தையும், நியூசிலாந்து கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் 12 சிக்சர்களுடன் 3வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

ஜிம்பாப்வே வீரர் பிரென்டன் டெய்லரும் 12 சிக்சர்களை அடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், தென்ஆப்ரிக்க வீரர் மில்லர் ஆகியோர் தலா 11 சிக்சர்களை அடித்துள்ளனர்.

சிக்சரில் டி வில்லியர்ஸ் அசத்தல்: பவுண்டரியில் சங்கக்காரா சக்கைப்போடு!

பவுண்டரி விளாசுவதில் இலங்கை வீரர் சங்கக்காரா முதலிடத்தில் உள்ளார். இவர் 6 போட்டிகளில் 54 பவுண்டரிகளை அடித்துள்ளார். மற்றொரு வீரர் தில்சன் 46 பவுண்டரிகளுடன் இரண்டாவது இடத்தையும் ஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லர் 43 பவுண்டரிகளுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்திய வீரர் ஷிகர் தவான் 39 பவுண்டரிகளுடன் 4வது இடத்தை பிடிக்கிறார். டி வில்லியர்ஸ், பிரெண்டன் மெக்கல்லம் தலா 35 பவுண்டரிகளை விளாசியுள்ளனர்.

நான்கு சதமடித்து இலங்கை வீரர் சங்கக்காரா முதலிடத்தில் உள்ளார். வங்கதேச வீரர் மக்மதுல்லா இந்திய வீரர் ஷிகர் தவான்,இலங்கை வீரர் தில்சன், ஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லர் தலா இரு சதங்கள் அடித்துள்ளனர்.

யு.ஏ.இ. வீரர் கிருஷ்ண சந்திரன் 5 போட்டிகளில் விளையாடி 3 முறை டக்அவுட்டாகியுள்ளார். 30 வயதான அவர் இந்த உலகக் கோப்பையில் எடுத்தது மொத்தமே 38 ரன்கள்தான். அதில் 3 முறை டக்அவுட், ஒரு முறை 34 ரன்கள், ஒரு முறை 4 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 8 வீரர்கள் தலா 2 முறை டக்அவுட்டாகியுள்ளனர். இதில் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயார்ன் மோர்கன் குறிப்பிடத்தக்கவர்

சிக்சரில் டி வில்லியர்ஸ் அசத்தல்: பவுண்டரியில் சங்கக்காரா சக்கைப்போடு!

இந்த உலகக் கோப்பையில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் 215 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்தார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அவர் இந்த சாதனையை படைத்தார். அடுத்ததாக, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆப்கானுக்கு எதிராக 178 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். டி வில்லியர்ஸ் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 162 ரன்கள், இலங்கை வீரர் தில்சன் வங்கதேச அணிக்கு எதிராக 161 ரன்கள், தென்ஆப்ரிக்க வீரர் ஹாசிம் ஆம்லா அயர்லாந்து அணிக்கு எதிராக 159 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தனர்.