Published:Updated:

ஒருநாள் போட்டி: சச்சின் யோசனையை நிராகரித்தது ஐசிசி

செப்.21,2011

ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இரண்டு இன்னிங்ஸ் கொண்ட ஆட்டமாக மாற்ற வேண்டும் என்ற இந்திய மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கரின் யோசனையை சர்வதேச கிரிக்கெட் கமிட்டியான ஐசிசி ஏற்க மறுத்தது. ##~~##

ஐம்பது ஓவர்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஐசிசிக்கு இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் யோசனை தெரிவித்துள்ளார். (ஒருநாள் போட்டியில் 2 இன்னிங்ஸ்: சச்சின் யோசனை)

தமது யோசனை குறித்து ஐசிசியின் தலைமைச் செயல் அதிகாரி ஹரூன் லோர்கட்டுக்கு அவர் கடிதம் எழுதினார்.

இந்த யோசனை குறித்து ஐசிசியின் ஹரூன் லோர்கட் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "நீண்ட நாட்களுக்கு முன்பே இந்த மாற்றம் குறித்து என்னுடன் சச்சின் பேசி வந்தார். அதுகுறித்து எழுத்துப்பூர்வமான பரிந்துரை ஒன்றையும் அளித்தார். அதனை கடந்த மே மாதம் நடந்த கமிட்டி கூட்டத்தில் விவாதித்தோம்.

எனினும், 50 ஓவர் கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானது அல்ல என்பதால் அந்தப் பரிந்துரையை ஐசிசி ஆலோசனைக் குழு நிராகரித்துவிட்டது. தற்போதைய சூழலில் இரண்டு இன்னிங்ஸ் கொண்ட ஒருநாள் போட்டி என்பது சாத்தியமானது அல்ல," என்றார் ஹரூன்.

அடுத்த கட்டுரைக்கு