Published:Updated:

சச்சின் கடிதத்தால் நியூசிலாந்தில் தப்பி பிழைத்த இந்திய ரசிகர்

Vikatan Correspondent
சச்சின் கடிதத்தால் நியூசிலாந்தில் தப்பி பிழைத்த இந்திய ரசிகர்
சச்சின் கடிதத்தால் நியூசிலாந்தில் தப்பி பிழைத்த இந்திய ரசிகர்

உலகக் கோப்பை போட்டியை காண நியூசிலாந்து சென்ற இந்திய ரசிகர் ஒருவருக்கு நியூசிலாந்து அதிகாரிகள் விதித்த 65 ஆயிரம் அபாராதப் பணத்தை கட்டாமல்  சச்சின் அளித்த கடிதத்தால் தப்பி ஓடியிருக்கிறார்.

சச்சின் கடிதத்தால் நியூசிலாந்தில் தப்பி பிழைத்த இந்திய ரசிகர்

உலகக் கோப்பை போட்டியை காண ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் முகாமிட்டுள்ளனர். இதில் நியூசிலாந்து நாடு ரொம்பவும் கட்டுக்கோப்பான விதிமுறைகள் கொண்ட நாடு. நம்ம ஊர் மாதிரி நான் அப்படி இப்படி எல்லாம் அங்கு சாக்கு போக்கு சொல்ல முடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேணும் அந்த நாட்டில், நம்ம நாட்டு ரசிகர் ஒருவர் உடல் முழுவதும் சாயத்தை பூசிக்கொண்டு போய் நின்றால் விடுவார்களா?

அப்படிதான் சுதிர் கவுதம் என்ற கிரிக்கெட் ரசிகர் ஆக்லாந்து விமான நிலையத்தில் மாட்டிக் கொண்டார். உடல் முழுவதும் மூவர்ண நிறம் பூசி, தலையில் இந்தியா போல ‘ஹேர் கட்’ செய்திருந்த கவுதமை மடக்கிப்பிடித்த அதிகாரிகள் அவரிடம் இருந்த சாயப் பாட்டில்களைப் பறிமுதல் செய்து 65 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றனர். ஆனால் சுதிர் குமாரிடம் அவ்வளவு பணம் கிடையாது. எங்கிட்ட பணம் கிடையாது சாமி...என்று சுதிர் கவுதம் மறுத்து பார்த்தார் அதிகாரிகள் விட்டபாடில்லை.

சச்சினின் தீவிர ரசிகரன சுதிருக்கு சச்சின் வழங்கிய கடிதம்தான் நியூசிலாந்து விசா பெற காரணமாக இருந்தது. அந்த கடிதத்தை கையோடு எடுத்துபோயிருக்கிறார் சுதிர். நல்லவேளையாக அந்த கடிதத்தை எடுத்து அதிகாரிகளிடம் காட்டினார். அவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை சச்சினின் கடிதத்தை பார்த்தவுடன் சுதிரை அபாராதம் வாங்காமல் விடுவித்து விட்டனர்.

இது குறித்து சுதிர் குமார்  கூறுகையில், ‘‘ அபராதம் கட்டுமாறு கூறியதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது. இந்திய அணியின் தீவிர ரசிகன் நான். எங்கு சென்றாலும் இப்படித் தான் செல்வேன்” என்றார் அப்பாவியாக...