Published:Updated:

ஒருநாள் போட்டியில் 2 இன்னிங்ஸ்: சச்சின் யோசனை

ஒருநாள் போட்டியில் 2 இன்னிங்ஸ்: சச்சின் யோசனை
ஒருநாள் போட்டியில் 2 இன்னிங்ஸ்: சச்சின் யோசனை

மும்பை, செப்.21,2011

ஒருநாள் போட்டியில் 2 இன்னிங்ஸ்: சச்சின் யோசனை

ஐம்பது ஓவர்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஐசிசிக்கு இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் யோசனை தெரிவித்துள்ளார். ##~~##

இதுகுறித்து ஐசிசியின் தலைமைச் செயல் அதிகாரி ஹரூன் லோகார்ட்டுக்கு சச்சின் கடிதம் எழுதியுள்ளார்.

இரு அணிகளுக்கும் தலா 50 ஓவர்களை விளையாடும் வகையில் தற்போது இருக்கும் வடிவத்தை மாற்றி, அணிக்கு 25 ஓவர்களைக் கொண்ட இரு இன்னிங்ஸாக ஒரு நாள் போட்டிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதே அவரது யோசனை.

அதாவது, ஒவ்வோர் அணியும் 25 ஓவர்களைக் கொண்ட இரண்டு இன்னிங்ஸ் ஆடும் வகையில் இந்தப் போட்டிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட், 20 ஓவர் கிரிக்கெட் இம்மூன்றையும் உள்ளடக்கிய வடிவமாக இது இருக்கும் என்பது சச்சினின் கருத்து.

தனக்குள் உதித்த சிந்தனைகளையே இந்தக் கடிதம் மூலம் தான் முன்வைத்திருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு