Published:Updated:

சிறந்த பேட்டிங் வரிசை கொண்ட அணி இந்தியா: ரசிகர்கள் தீர்ப்பு!

சிறந்த பேட்டிங் வரிசை கொண்ட அணி இந்தியா: ரசிகர்கள் தீர்ப்பு!
சிறந்த பேட்டிங் வரிசை கொண்ட அணி இந்தியா: ரசிகர்கள் தீர்ப்பு!

லகக் கோப்பைத் தொடரில் சிறந்த பேட்டிங் வரிசையுள்ள அணிக்கான கிரிக் இன்ஃபோ வாக்கெடுப்பில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

சிறந்த பேட்டிங் வரிசை கொண்ட அணி இந்தியா: ரசிகர்கள் தீர்ப்பு!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளில், சிறந்த பேட்டிங் வரிசை உடைய அணி குறித்து பிரபல கிரிக்கின்ஃபோ இணையதளம் கருத்து கணிப்பு நடத்தி வருகிறது. இந்த வாக்குப்பதிவில் 32.33 சதவீத வாக்குகளுடன் இந்திய அணி முதலிடத்தை பெற்றுள்ளது. இந்திய அணியில் ரோகித் சர்மா, தவான், விராட்கோலி, ரஹானே, தோனி என வலிமையான பேட்டிங் வரிசை இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி 23.30 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. தென்ஆப்ரிக்க அணி 16.41 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தையும் இலங்கை அணி 11.80 வாக்குகளுடன் 4வது இடத்தையும் பெற்றுள்ளன.

நியூசிலாந்து அணி 5.63 சதவீத வாக்குகளுடன் 5வது இடத்தையும், பாகிஸ்தான் அணி 4.09 சதவீத வாக்குகளுடன் 6வது இடத்தையும் பெற்றுள்ளன. இதில் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு ஒரு சதவீத வாக்குகள் கூட கிடைக்கவில்லை.

அதேபோல் வாக்குப்பதிவில் கத்துக்குட்டி அணிகளான ஸ்காட்லாந்து, யு.ஏ.இ, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மூத்த கத்துக்குட்டியான ஜிம்பாப்வே அணியுடன் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன.