Published:Updated:

ஐ.பி.எல்.லில் ஏலம் போகாத வீரருக்கு கிடைத்த மவுசை பாருங்கள்...!

ஐ.பி.எல்.லில் ஏலம் போகாத வீரருக்கு கிடைத்த மவுசை பாருங்கள்...!
ஐ.பி.எல்.லில் ஏலம் போகாத வீரருக்கு கிடைத்த மவுசை பாருங்கள்...!

ந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி, மக்கள் அதாவது ரசிகர்கள் விரும்பும் வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல்.லில் ஏலம் போகாத வீரருக்கு கிடைத்த மவுசை பாருங்கள்...!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, ரசிகர்கள்

ஐ.பி.எல்.லில் ஏலம் போகாத வீரருக்கு கிடைத்த மவுசை பாருங்கள்...!

அதிகம் விரும்பும் 11 வீரர்கள் அடங்கிய அணியை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

அதில், 5 பேட்ஸ்மேன்கள், 2 ஆல்ரவுண்டர்கள், ஒரு விக்கெட் கீப்பர், 3 பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில், ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்ரிக்கா அணிகளில் இருந்து தலா 3 வீரர்களும், இலங்கையை சேர்ந்த இருவரும், இந்தியா, நியூசிலாந்து, பங்ளாதேஷ் அணிகளின் வீரர்கள் தலா ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.

இதில், கிரிக்கெட் விளையாட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து ஒரு வீரர் கூட இடம் பெறவில்லை. இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கும் இதே நிலைதான்.

ஐ.பி.எல். போட்டியில் ஏலம் எடுக்க கூட ஆள் இல்லாமல் இருந்த தென்ஆப்ரிக்க வீரர் ஹாசிம் ஆம்லாவுக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரை, துணை கேப்டன் விராட் கோலிக்கு இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. விக்கெட் கீப்பர் வரிசையில் கேப்டன் தோனிக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 11 வீரர்கள் யார்?யார் என்பதை பார்ப்போம்...

1.ஹாசிம் ஆம்லா- தென்ஆப்ரிக்கா

2.பிரன்டன் மெக்குல்லம்- நியூசிலாந்து
.
3.குமார சங்கக்காரா- இலங்கை

4.விராட் கோலி- இந்தியா

5.ஏபி டி வில்லியர்ஸ்- தென்ஆப்ரிக்கா

6.ஸ்டீவ் ஸ்மித்-ஆஸ்திரேலியா

7.சாகீப் அல் ஹசன்- வங்காளதேசம்

8.ஜேம்ஸ் பக்னர்-ஆஸ்திரேலியா

9.மிட்செல் ஜான்சன்- ஆஸ்திரேலியா

10.மேல் ஸ்டெயின்- தென்ஆப்ரிக்கா

11.லசித் மலிங்கா- இலங்கை