Published:Updated:

பைக் விபத்தில் காயமடைந்த அசாருதீன் மகன் மரணம்

பைக் விபத்தில் காயமடைந்த அசாருதீன் மகன் மரணம்
பைக் விபத்தில் காயமடைந்த அசாருதீன் மகன் மரணம்

ஹைதராபாத், செப்.16,2011 ##~~##

பைக் விபத்தில் காயமடைந்த அசாருதீன் மகன் மரணம்

அண்மையில் பைக் விபத்தில் படுகாயமடைந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் அசாருதீனின் மகன் அயாசுதீன் (வயது 19) சிகிச்சைப் பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.

ஹைதராபாத் புறநகர் பகுதியில் உள்ள ரிங்ரோட்டில் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றபோது அயாசுதீன் விபத்தில் சிக்கினார். அவருடன் வந்த உறவினர் மகன் அஜ்மல்-உர் ரகுமான் மரணமடைந்தார்.

இந்த நிலையில், மருத்துமனையில் கடந்த 5 நாட்கள் தொடர்ந்து அளித்த சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அயாசுதீன் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.