Published:Updated:

இந்தியா ஜுஜுபியாம்..! - சொல்கிறது ஆப்கான்!

இந்தியா ஜுஜுபியாம்..! -  சொல்கிறது ஆப்கான்!
இந்தியா ஜுஜுபியாம்..! - சொல்கிறது ஆப்கான்!

லகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்துவாம் என கத்துக்குட்டி  ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா ஜுஜுபியாம்..! -  சொல்கிறது ஆப்கான்!

இந்திய அணியின் தொடர் தோல்விகளால் கத்துக்குட்டி அணிகள் தெம்பாக உள்ளன. ஒரு ஜாம்பவான் அணியையாவது வீழ்த்திவிட்டால் உலகப் புகழ் பெற்றுவிடலாம் என்ற நினைப்பில் கத்துக்குட்டிகள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. அடிலெய்டில் நாளை நடக்கும்  பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி கூறுகையில்,‘‘இந்தியாவுடன் விளையாடுவது எங்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். எங்களிடம் உள்ள அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தி இந்த போட்டியில்  இந்தியாவை வீழ்த்துவோம். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஆசியாவில் உள்ள பிட்சுகளை விட ஆஸ்திரேலிய, நியூசிலாந்து களங்கள் மாறுபட்டவை. நீண்ட நாட்களாக நாங்கள் இங்கு பயிற்சி எடுத்துள்ளோம். எங்கள் பயிற்சி அனைத்தையும் இந்தியாவுக்கு எதிராக காட்டுவோம் ’’என்றார்.