Published:Updated:

டிடிஹெச், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு வரிவிதிப்பு உள்பட 10 மசோதாக்கள் பேரவையில் தாக்கல்

டிடிஹெச், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு வரிவிதிப்பு உள்பட 10 மசோதாக்கள் பேரவையில் தாக்கல்
டிடிஹெச், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு வரிவிதிப்பு உள்பட 10 மசோதாக்கள் பேரவையில் தாக்கல்

டிடிஹெச், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு வரிவிதிப்பு உள்பட 10 மசோதாக்கள் பேரவையில் தாக்கல்

சென்னை, செப்.14,2011

டிடிஹெச், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு வரிவிதிப்பு உள்பட 10 மசோதாக்கள் பேரவையில் தாக்கல்

தமிழக சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்று டிடிஹெச் சேவை, ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு வரிவிதிப்பு உள்பட 10 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ##~~##

டிடிஹெச் சேவை, ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு வரி விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்தார்.

இம்மசோதாவில், "தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டத்தின்படி வீடுகளுக்கு நேரடி சேவையாக வழங்கப்படும் (டி.டி.ஹெச்.) கேளிக்கைகளையும் இந்திய பிரதான கழகத்தால் (ஐ.பி.எல்.) நடத்தி வரும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளுக்கு இதுவரை வரி எதுவும் இல்லை. சில மாநிலங்களில் இதற்கு கேளிக்கை வரி விதிக்கப்பட்டு வருகிறது.

எனவே தமிழக அரசும் டி.டி.ஹெச். சேவைக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கும் கேளிக்கை வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி டி.டி.எச். நிறுவனங்களுக்கு 30 சதவீதமும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மீதான வரி 25 சதவீதமும் வரி விதிக்கப்படும்.

திரையரங்கு வரி...

திரையரங்குகளில் திரைப்பட காட்சியை ஒளிபரப்ப அனுமதிப்பதற்கான வரியையும் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.  

வணிகர்களிடம் இருந்து விற்பனை வரி நிலுவை தொகையை வசூலிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. நிலுவைகளை வசூலிக்க மீண்டும் சமாதான திட்டத்தை அறிமுகம் செய்ய சட்டசபையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டம் அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டு இருந்தது. அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்படுகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் விற்பதற்கான பெட்ரோலிய பொருட்கள் இங்கு விற்கப்படுகிறது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

இந்த வரி ஏய்ப்பை தடுக்க சட்டதிருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தின்படி 6-வது இணைப்பு பட்டியலில் குறிப்பிட்டுள்ள மாநிலங்களுக்கு இடையே விற்பனை செய்யப்படும் எந்த சரக்குகளுக்கும் கடவு சீட்டு அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் திருத்தம் செய்யப்படுகிறது," என்று அம்மசோதாவில் தெரிவிக்கப்பட்டது. இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

டிடிஹெச் சேவை, ஐபிஎல் கிரிக்கெட்டுக்கான வரிவிதிப்பு மசோதா தவிர, சென்னை மாநகர காவல்துறையுடன் சென்னை புறநகர் காவல்துறையை இணைப்பதற்கான அரசாணைக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக 2008-ம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டத்தை நீக்கம் செய்யும் வகையில் சட்ட மசோதா;

சட்டப்பேரவை, மேலவை அல்லது இரண்டிலும் உறுப்பினராக இருந்த அல்லது இருக்கிற யாரேனும் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய் இருக்கும்சமயம் அவருடைய குடும்பத்துக்கு ஓய்வூதியத்தை வழங்க அரசு முடிவு செய்கிறது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் சட்டதிருத்தம் உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

அடுத்த கட்டுரைக்கு