Published:Updated:

செஞ்சூரியன் டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் தோல்வி!

Vikatan Correspondent

 செஞ்சூரியன், டிச.20,2010

செஞ்சூரியன் மைதானத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா இன்னிங்ஸ் தோல்வி கண்டது. ##~~##

எனினும், இப்போட்டியின் மூலம் சச்சின் டெண்டுல்கர் புதிய சரித்திரம் படைத்திருப்பது ரசிகர்களுக்கு சற்றே ஆறுதல் தந்துள்ளது. (டெஸ்ட்டில் 50வது சதம்: சச்சினின் புதிய சரித்திரம்!  )

முதல் இன்னிங்ஸ்சில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் ஆட்டம் ஸ்திரமாக இருந்தது.

இந்தியா தனது முதல் இன்னிங்ஸ்சில் வெறும் 136 ரன்களே எடுத்தது; இரண்டாவது இன்னிங்ஸ்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 456 ரன்கள் எடுத்தது. சச்சின் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் குவித்தார். தோனி 90 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ்சில் 620 ரன்கள் குவித்தது. காலிஸ் இரட்டை சதமும், ஆம்லாவும் டிவில்லியர்ஸும் சதமடித்தனர்.

இந்தப் போட்டியில், தென் ஆப்பிரிக்கா ஒரு இன்னிங்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது. காலிஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.