Published:Updated:

'ஜாகீர்கான் பழையநிலைக்கு திரும்ப கடினமுயற்சி தேவை'

Vikatan Correspondent
'ஜாகீர்கான் பழையநிலைக்கு திரும்ப கடினமுயற்சி தேவை'
'ஜாகீர்கான் பழையநிலைக்கு திரும்ப கடினமுயற்சி தேவை'

சவுதம்டன், செப்.8,2011

இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப, அவர் கடினமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார். ##~~##

இதுகுறித்து அவர் கூறுகையில், "வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாகீர் கான் போன்ற வயதில் காயம் அடைய தொடங்கினால் அதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். அவர் கடுமையாக உழைத்தால் தான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியும். அப்படி செய்யாவிட்டால் வேகப்பந்து வீச்சாளர்கள் நீண்ட நாட்கள் நிலைத்து விளையாட முடியாது. ஒரு சில ஆட்டங்களில் விளையாடியதும் மீண்டும் காயம் அடையக்கூடும்.

ஆனால், சச்சின் டெண்டுல்கர் கதை வேறு விதமானது. பேட்ஸ்மேன் உடல் தகுதி பிரச்னை வேறு மாதிரியானது. டெண்டுல்கர் விரைவில் களம் திரும்பி விட முடியும்.

சச்சின் எல்லாவிதமான சாதனைகளையும் படைத்து விட்டார். அவருக்கு செய்ய வேண்டிய பாக்கி எதுவும் இல்லை. அவர் நூறு சதத்தை எட்ட மேலும் ஒரு செஞ்சுரி அடிக்க வேண்டியது எந்த வகையிலும் வந்து விடும்.

டெண்டுல்கர் என்ன செய்ய நினைக்கிறாரோ? அதற்கு தக்கப்படி தனது மனதை தயார்படுத்த வேண்டும். அவரது உடல் நிலை குறித்து அவருக்கு தான் தெரியும். அது குறித்து வெளியில் இருப்பவர்கள் கருத்து சொல்வது சரியாகாது," என்றார் கபில் தேவ்.