Published:Updated:

டெஸ்ட்டில் 50வது சதம்: சச்சினின் புதிய சரித்திரம்!

Vikatan Correspondent

செஞ்சூரியன், டிச.20,2010:

டெஸ்ட்டில் 50வது சதம்: சச்சினின் புதிய சரித்திரம்!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 50வது சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையை இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் படைத்தார். ##~~##

செஞ்சூரியன் நகரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் 2-வது இன்னிங்சின் 4வது நாளான ஞாயிற்றுக்கிழமை, இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 197 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார். இது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 50-வது சதமாகும்.

கடந்த 133 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இதுவரை 1985 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில், 175 டெஸ்ட் ஆடியிருக்கும் டெண்டுல்கர் 50-வது சதத்தை எட்டிய முதல் வீரர் என்ற அரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

இந்திய வீரர்களில் ஓர் ஆண்டில் அதிகபட்சமாக சேவாக் 1,462 ரன்கள் (2008-ம் ஆண்டு) எடுத்திருந்தார். இந்த சாதனையையும் டெண்டுல்கர் முறியடித்தார். அவர், 2010-ம் ஆண்டில் இதுவரை 1,500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

தனது 37-வது வயதிலும் தொடர்ந்து களத்தில் சிறப்பாக ஆடி வரும் சச்சின், கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நாள் போட்டி வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சரித்திரத்தையும் படைத்தது நினைவுகூரத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அரிய சாதனையை நிகழ்த்தியிருக்கும், சச்சினுக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.