Published:Updated:

விளையாட்டு மசோதா: பிசிசிஐ எதிர்ப்பால் தாமதம்

விளையாட்டு மசோதா: பிசிசிஐ எதிர்ப்பால் தாமதம்
விளையாட்டு மசோதா: பிசிசிஐ எதிர்ப்பால் தாமதம்

புதுடெல்லி, ஆக.31,2011

விளையாட்டு மசோதா: பிசிசிஐ எதிர்ப்பால் தாமதம்

இந்திய விளையாட்டுத்துறையில் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் பிசிசிஐ உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முட்டுக்கட்டைகள் எழுந்துள்ளன. ##~~##

இதுதொடர்பான மசோதாவை மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை நிராகரித்துள்ளது.

இந்திய விளையாட்டுத்துறையில் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் பிசிசிஐ உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதுதொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டால். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் கொண்டுவரப்படும்.

ஆனால், மத்திய அரசின் முடிவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக, அமைச்சர் சரத் பவார் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதனால், இம்மசோதா தாக்கலாவது சந்தேகமே என்ற நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ செய்தி தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கூறுகையில், "அரசிடம் இருந்து நிதி உதவி பெறும் விளையாட்டு பெடரேஷன்கள் தான் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குட்படும். அரசிடம் நிதி உதவி பெறாத இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த சட்டத்துக்கு உட்படாது. அதற்கான தேவை எதுவும் இல்லை," என்றார்.

அதேவேளையில், "அரசின் வழிமுறைகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கட்டுப்படுவது நல்லது," இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான கபில்தேவ், அசாருதீன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு