Published:Updated:

முதல் சர்வதேச இருபது ஓவர் போட்டியில் டிராவிட்!

முதல் சர்வதேச இருபது ஓவர் போட்டியில் டிராவிட்!
முதல் சர்வதேச இருபது ஓவர் போட்டியில் டிராவிட்!

மான்செஸ்டர், ஆக.31,2011

முதல் சர்வதேச இருபது ஓவர் போட்டியில் டிராவிட்!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ராகுல் டிராவிட் முதல் முறையாக சர்வதேச இருபது ஓவர் போட்டியில் களமிறங்குகிறார். ##~~##

இந்தியா - இங்கிலாந்து மோதும் டிவென்டி 20 கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று இரவு நடக்கிறது.

டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் படுதோல்வியுற்ற இந்திய அணி, இருபது ஓவர் போட்டியில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோஹ்லி, ரோகித் ஷர்மா ஆகிய இளம் வீரர்கள் நல்ல பார்மில் இருப்பது அணிக்கு தெம்பைக் கூடும் எனத் தெரிகிறதும். காயம் காரணமாக, கவுதம் கம்பீர் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. பார்த்தீவ் பட்டேலும், ரஹானேவும் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடவுள்ளனர்.

மூத்த வீரரான 38 வயது ராகுல் டிராவிட் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குகிறார். அவர் விளையாடப்போகும் முதல் சர்வதேச 20 ஓவர் போட்டி இதுவாகும்.

இந்த தொடருடன் அவர் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதால் அவர் ஆடும் கடைசி 20 ஓவர் சர்வதேச போட்டியாகவும் இது அமையும்.

எனினும், சச்சின் இப்போட்டியில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது.

"வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும். வீரர்களுக்கு ஓய்வு என்பது முக்கியமான ஒன்று. ரெய்னா மூன்று வடிவிலான போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். உடல்ரீதியான அம்சங்களை விட மனரீதியான விஷயங்களுக்கு அதிக கவனம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். நல்ல ஓய்வு, காயமடைவதில் இருந்து தப்பிக்க உதவும்," என்று இந்திய கேப்டன் டோனி கூறினார்.

அதேவேளையில், இங்கிலாந்து கேப்டன் ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில், "20 ஓவர் போட்டியில் இந்தியா வலுவான அணி. அந்த அணியில் திறமையான வீரர்களும், இளம் வீரர்களும் இருக்கிறார்கள். அவர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முழு கவனத்தையும் செலுத்தி வருகிறோம். டெஸ்டில் கண்ட வெற்றிவேகத்தை இங்கு தொடர ஆவலுடன் உள்ளோம்," என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு