Published:Updated:

கேல் ரத்னா விருது பெற்றார் ககன் நரங்!

கேல் ரத்னா விருது பெற்றார் ககன் நரங்!
கேல் ரத்னா விருது பெற்றார் ககன் நரங்!

புதுடெல்லி, ஆக.29,2011

கேல் ரத்னா விருது பெற்றார் ககன் நரங்!

விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் நாட்டின் மிக உயரிய 'கேல் ரத்னா' விருது, துப்பாக்‍கிச் சுடும் வீரர் ககன் நரங்குக்கு இன்று வழங்கப்பட்டது. ##~~##

டெல்லியில் இன்று நடைபெற்ற நிகச்சியில், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு, குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் விருதுகளை வழங்கினார்.

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் அதிக பதக்‍கங்கள் குவித்ததால், 'கேல் ரத்னா' விருதுக்‍கு தேர்வு செய்யப்பட்ட துப்பாக்‍கி சுடும் வீரர் ககன் நரங், அவ்விருதை பெற்றுக்‍ கொண்டார். விருதுடன் அவருக்‍கு ஏழரை லட்சம் ரூபாய் ரொக்‍கப் பரிசும் வழங்கப்பட்டது.

ஹாக்‍கி வீரர் ராஜ்பால் சிங், கால்பந்து வீரர் சுனில் சேட்ரி, பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகள் அர்ஜுனா விருதுகளை பெற்றுக்‍கொண்டனர்.

இவ்விருதுக்‍கு ​தேர்வு செய்யப்பட்ட பிரபல கிரிக்‍கெட் வீரர் ஜாகீர்கான், டென்னிஸ் நட்சத்திரம் சோம்தேவ் தேவ் வர்மன் உள்ளிட்ட சிலர் சொந்த காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.