Published:Updated:

தொடக்க நாயகனின் தொடரும் வெற்றிகள்!

தொடக்க நாயகனின் தொடரும் வெற்றிகள்!
தொடக்க நாயகனின் தொடரும் வெற்றிகள்!

தொடக்க நாயகனின் தொடரும் வெற்றிகள்!

இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்ததோடு, ஒரு நாள் போட்டிகளில் யாரும் தொடமுடியாதபடி அதிகபட்ச ரன்கள் குவித்து சாதனை மேல் சாதனைப் படைத்திருக்கிறார் ரோஹித் ஷர்மா. இந்திய அணியில் ஷேவாக், கம்பீர் இல்லாத நிலையில் யாரை துவக்க வீரராக்கலாம் என்ற கேள்வி எழுந்தபோது தோனியின் சாய்ஸ் ரோஹித் ஷர்மா. 27 வயதான ரோஹித் ஷர்மா கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து உலக கவனத்தைத் தன்பக்கம் ஈர்த்தார். இந்தமுறை இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்திருக்கிறார்.

தொடக்க நாயகனின் தொடரும் வெற்றிகள்!

1987ம் ஆண்டு ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்தவர் ரோஹித் ஷர்மா. பின்னர் அவரது குடும்பம் மகாராஷ்டிராவில் செட்டிலாக மும்பைவாசியானர். 2006ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்தவருக்கான தொடர்நாயகன் விருதை பெற்றார். இதன்மூலம் 2007ஆம் ஆண்டு அயர்லாந்து தொடரில் ஆடும் இந்திய அணியில் இடம்பிடித்தார் ரோஹித். 2007ம் ஆண்டு சச்சின், டிராவிட், கங்குலி இல்லாமல் இந்தியா டி20 உலகக்கோப்பையை எதிர்கொண்டது. அதில் ரோஹித்துக்கும் வாய்ப்பு கிடைத்தது. சரியான வாய்ப்புகளை பயன்படுத்திய ரோஹித், உலககோப்பை இறுதி ஆட்டத்தில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு வலுசேர்த்தார். ஆனால் அடிக்கடி அவுட் ஆஃப் ஃபார்முக்குப் போனதால் ரோஹித்துக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை.

2013 ம் ஆண்டு இந்தியன் கிரிக்கெட் டீமின், ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக மாறினார். நவம்பர், 6 2013ல் இந்தியா வெஸ்டி இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை விளையாடினார். அந்த போட்டிகளில் தொடர்ச்சியாக தன்னுடைய சாதனையை பதித்தார் ரோஹித். முதல் டெஸ்ட் போட்டி இந்தியாவின் மிகப் பெரிய மைதானமான ஈடன் கார்டனில் 301 பந்துகளுக்கு 177 ரன்களை குவித்தார். 23 ஃபோர்களும், ஒரு சிக்ஸரும் விளாசினார். ஆரம்ப ஆட்டத்திலேயே ரோஹித் தனித்து தெரிந்ததவர்க்கு இவரின் முதல் ஆட்டமே காரணம். அதை தொடர்ந்து அடுத்த டெஸ்ட் போட்டியிலும் 111 ரன்கள்  அடித்து அடுத்த சதத்தினையும் சாதித்துக் காட்டினார்.

தொடக்க நாயகனின் தொடரும் வெற்றிகள்!

அதன்பின் இந்திய அணிக்குள் உள்ளே, வெளியே என்று இருந்த ரோஹித்திற்கு வாய்ப்பு காத்திருந்தது. தோனியின் துவக்க ஆட்டக்காரர் தேடலில் இடம் பிடித்தார். அதற்கு காரணம் சச்சின் இல்லாத மும்பை அணியை கேப்டனாக சிறப்பாக வழிநடத்தியதும் இறுதி போட்டியில் தோனியின் அணியான சென்னையை வீழ்த்தியதும் தான்.

ரோகித்தின் திருப்பு முனையாக அமைந்தது ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள்  போட்டியில் தவானுடன் 177 ரன்கள் அடித்தார். பின்னர் கடைசி ஒருநாள் போட்டியில் பெங்களூரு மைதானத்தில், சேவாக் சச்சின் தொடர்ந்து மூன்றாவது ஓர் இந்தியன் 209 ரன்கள் கடந்து சாதனைபடைத்தார். சிறிய மைதானம் எளிதில் அடித்துவிட்டார் என்ற விமர்சனமும் அவர்மேல் இருந்தது. அதை முறியடிக்கவே இந்தியாவின் மிகப்பெரிய மைதானமான ஈடன் கார்டனின் 150வது ஆண்டு விழாவை கொண்டாடும் வேளையில் நேற்று  இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 264 ரன்களை குவித்து உலக சாதனையைப் படைத்தார் ரோகித்.

தொடக்க நாயகனின் தொடரும் வெற்றிகள்!

இதில் ஒரு சிறப்பும் இருக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. அதுபோலவே டெஸ்டில் சச்சின் 200 ரன்கள் அடித்த போதிலும், சேவாக் 219 ரன்கள் அடித்த போதிலும் இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் எதிர் அணியை வென்றது குறிப்பிடத்தக்கது. கம்பீர், சேவாக் அடுத்த படியாக ஒரு சரியான தொடக்க ஆட்டக்காரர் இல்லை என்ற அச்சம் இனி இல்லை. இவரின் அடுத்த இலக்கான ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 2015 ஆண்டின் உலக கோப்பையையும் நமதாக்குவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

குட்லக் ரோஹித்.

பி.எஸ்.முத்து

அடுத்த கட்டுரைக்கு