Published:Updated:

வீட்டு பிரியாணிக்கு தடை: ஓட்டலிலிருந்து வெளியேறிய தோனி!

வீட்டு பிரியாணிக்கு தடை: ஓட்டலிலிருந்து வெளியேறிய தோனி!
வீட்டு பிரியாணிக்கு தடை: ஓட்டலிலிருந்து வெளியேறிய தோனி!
வீட்டு பிரியாணிக்கு தடை: ஓட்டலிலிருந்து வெளியேறிய தோனி!

ஹைதராபாத்: வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரியாணியை கொண்டுவர அனுமதி மறுத்ததால் அணியினருடன் ஓட்டலை விட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி வெளியேறியுள்ளார்.

ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டிக்காக ஓட்டல் கிரண்ட் காகாதியாவில் சென்னை அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் சக வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரருமான அம்பத்தி ராயுடு, சென்னை அணி கேப்டன் தோனிக்கு, வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரியாணியை கொடுத்து அனுப்பினார். ஆனால் ஓட்டல் நிர்வாகம் வீட்டில் இருந்து கொண்டு செல்லும் உணவு பொருட்களுக்கு  அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

இதனால் கோபம் அடைந்த தோனி, அணி நிர்வாகத்தை புக்கிங்கை ரத்து செய்யுமாறு  கேட்டுக்கொண்டார். பின்னர் சென்னை அணி வீரர்கள் தாஜ் கிருஷ்ணா ஓட்டலுக்கு சென்றுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அம்பத்தி ராயுடு ராய்பூரில் உள்ளார். அவருடைய கோரிக்கையின் பேரிலேயே பிரியாணி வீட்டில் தயாரிக்கப்பட்டு ஓட்டலுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

வீட்டு பிரியாணிக்கு தடை: ஓட்டலிலிருந்து வெளியேறிய தோனி!

கிரிக்கெட் வீரர்களுக்கு வீட்டில் இருந்து உணவு தயாரிக்கப்பட்டு அளிப்பது ஒன்றும் புதிதல்ல. நீண்ட கால சுற்றுப்பயணம் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வீட்டில் இருந்து வீரர்களுக்கு உணவு அனுப்பப்படுகிறது.

இந்த சம்பவம் பற்றி ஓட்டல் நிர்வாகம் கூறுகையில், ஓட்டல் வளாகத்திற்குள் வெளியில் இருந்து கொண்டு வரப்படும் உணவு பொருட்களுக்கு அனுமதி இல்லை என்ற கண்டிப்பான விதிகள் இருந்த போதும், வீரர்களுக்கு அனுமதி அளிக்க ஓட்டல் நிர்வாகம் பரிசீலித்தது. ஆனால் வாரியம் புக் செய்து இருந்த அறையை மாற்ற வேண்டும் என தோனி பிடிவதமாக இருந்தார் என்று கூறினர்.