Published:Updated:

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!

Vikatan Correspondent
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!

ஹைதராபாத்: சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஹைதராபாத்தில் நேற்றிரவு நடந்த சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் முதலில் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார்.

இதைத் தொடர்ந்து வெய்ன் சுமித்தும், பிரன்டன் மெக்கல்லமும் சென்னை அணியின் இன்னிங்சை தொடங்கினர். வெய்ன் சுமித் 20 ரன்னிலும், மெக்கல்லம் 22 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 28 ரன்னிலும், பாப் டு பிளிஸ்சிஸ் 14 ரன்னிலும் வெளியேறினர்.

இதன் பின்னர் 5வது விக்கெட்டுக்கு கேப்டன் தோனியும், ஆல் ரவுண்டர் வெய்ன் பிராவோவும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியால் ரன்கள் குவிக்க முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. டோனி 35 ரன்களுடனும், பிராவோ 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

கொல்கத்தா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் பியுஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளும், சுனில் நரின், யூசுப் பதான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 158 ரன்கள் இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடியது. கேப்டன் கவுதம் கம்பீர் (6), மனிஷ் பாண்டே (0), பிஸ்லா (2) ஆகியோர் ஆஷிஷ் நெஹராவின் வேகத்தில் வீழ்ந்தனர். யூசுப் பதான் (1), சூர்யகுமார் யாதவ் (19) ஆகியோரும் வெளியேற 9 ஓவரில் 51 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் ரையான் டென்டஸ்சாட்டும், ஆந்த்ரே ரஸ்செலும் ஜோடி அதிரடியாக விளையாடி ரன் குவித்தது. 25 பந்தில் 58 ரன்கள் குவித்த ரஸ்செல், ஹெக்ரா பந்தில் ஆட்டம் இழந்தார். இதில் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் அடங்கும்.

பின்னர் களம் இறங்கிய கம்மின்ஸ் (8) ரன் அவுட் ஆனாலும், டென்டஸ்சாட் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கொல்கத்தா அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. டென்டஸ்சாட் 51 ரன்களுடன் களத்தில் நின்றார். நெஹரா 4 விக்கெட் வீழ்த்தியும் பலன் இல்லாமல் போய் விட்டது. ஆட்டநாயகனாக ரஸ்செல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னை அணி, தனது அடுத்த ஆட்டத்தில் டால்பின்ஸ் அணியை வரும் 22ஆம் தேதி எதிர்கொள்கிறது.