Published:Updated:

தென் ஆப்பிரிக்காவுடன் முதல் டெஸ்ட்: ஸ்டெயின் பந்தில் ஆட்டம் காணும் இலங்கை!

Vikatan Correspondent
தென் ஆப்பிரிக்காவுடன் முதல் டெஸ்ட்: ஸ்டெயின் பந்தில் ஆட்டம் காணும் இலங்கை!
தென் ஆப்பிரிக்காவுடன் முதல் டெஸ்ட்: ஸ்டெயின் பந்தில் ஆட்டம் காணும் இலங்கை!
தென் ஆப்பிரிக்காவுடன் முதல் டெஸ்ட்: ஸ்டெயின் பந்தில் ஆட்டம் காணும் இலங்கை!

ஹாலே: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 270 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தென் ஆப்பிரிக்கா வீரர் ஸ்டெயின் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர் எல்கார் அபாரமாக விளையாடி 103 ரன்னும், டுமினி 100 ரன்னும் குவித்தனர். டு பிளெஸ்சிஸ் 80 ரன்னும், டி காக் 51 ரன்னும் எடுத்தனர். இவர்களின் அபார ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை இழந்து 455 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதைத் தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க வீரர் தரங்கா 83 ரன்னும், சங்கக்கரா 24 ரன்னும், திரிமண்ணே 38 ரன்னும் எடுத்தனர்.

201 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த தவித்த இலங்கை அணிக்கு ஓரளவு கை கொடுத்து வருகிறார் மேத்யூஸ்.  தற்போது இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்துள்ளது. போராடி வந்த திரிமண்ணே 89 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை தாகீர் வீழ்த்தினார். திரிமண்ணே 88 ரன்னிலும், ஹெராத் 12 ரன்னிலும், லக்மால் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.

ஸ்டெயின் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மார்கெல், டுமினி தலா ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளனர். 3வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.