Published:Updated:

20 வயது பெண்ணை மணந்தார் 39 வயது சோயிப் அக்தர்!

20 வயது பெண்ணை மணந்தார் 39 வயது சோயிப் அக்தர்!
20 வயது பெண்ணை மணந்தார் 39 வயது சோயிப் அக்தர்!
20 வயது பெண்ணை மணந்தார் 39 வயது சோயிப் அக்தர்!

கராச்சி: 39 வயதான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர், தன்னைவிட 19 வயது குறைவான இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சர்ச்சை நாயகன் என்று கூறப்பட்ட வேகபந்துவீச்சாளர் சோயிப் அக்தரின் திருமணம் ஹரிப்பூரில் ரகசியமாக நடந்துள்ளது.

கடந்த ஜூன் 12ஆம் தேதியே மணப்பெண்ணான ரூபாப் வீட்டில் வைத்துதான் திருமணம் நடந்துள்ளது. ரூபாப்புக்கு கிரிக்கெட் மீது அதிகமான ஆர்வம் கிடையாதாம். இவருக்கு 3 சகோதரர்கள் உள்ளனர். இவரது தந்தை முஸ்தாக்கான் தொழிலதிபர்.

சோயிப் அக்தர் 20 வயதான ரூபாப்புடன் திருமணம் செய்திருப்பது பற்றிய தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இதை அவர் முற்றிலும் மறுத்து இருந்தார். தற்போது, இருவரும் ஜோடியாக இருப்பது போன்ற படம் வெளியாகியிருப்பதன் மூலம் திருமணம் செய்து கொண்ட தகவல் உண்மையானவை என்று தெரியவந்துள்ளது.