Published:Updated:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார் ஸ்ரீனிவாசன்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார் ஸ்ரீனிவாசன்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார் ஸ்ரீனிவாசன்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார் ஸ்ரீனிவாசன்!

மெல்போர்ன்: பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த ஸ்ரீனிவாசன், கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரின்பேரில் உச்ச நீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்ததோடு, பிசிசிஐ தற்காலிக தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கரை நியமித்தது.

இதனிடையே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக ஸ்ரீனிவாசன் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு  தெரிவித்து பீகார் கிரிக்கெட் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக என்.ஸ்ரீனிவாசன் இன்று முறைப்படி நியமிக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெற்ற கூட்டத்தில், ஐசிசி கவுன்சிலின் 52 உறுப்பினர்கள் அளித்த ஒப்புதலைத் தொடர்ந்து, ஐசிசி தலைவராக ஸ்ரீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஐசிசி நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, புதிய சீர்திருத்தங்களை மேற்கொண்டனர்.

இந்தப் புதிய சீர்திருத்தங்களுக்குப் பிறகு, தேர்வு செய்யப்படும் முதல் ஐசிசி தலைவர் ஸ்ரீனிவாசன் ஆவார்.