Published:Updated:

தோனிக்கு ஹைதராபாத் நீதிமன்றம் கைது வாரண்ட்!

தோனிக்கு ஹைதராபாத் நீதிமன்றம் கைது வாரண்ட்!
தோனிக்கு ஹைதராபாத் நீதிமன்றம் கைது வாரண்ட்!
தோனிக்கு ஹைதராபாத் நீதிமன்றம் கைது வாரண்ட்!

ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஹைதராபாத் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பல்வேறு பொருட்களுக்கு விளம்பர மாடலாக உள்ளார்.

இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'பிசினஸ் டுடே' இதழில் தோனியை இந்துக் கடவுள் விஷ்ணுவாக சித்தரித்து, அவரது கையில் ஷூ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்திருப்பது போல் அட்டைப்படம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்த விஷ்வ இந்து பரிசத் தலைவர் ஷியாம் சுந்தர், அனந்தபூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இந்து கடவுளை அவமதிக்கும் வகையிலும், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் விளம்பரத்திற்கு தோனி போஸ் கொடுத்திருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளிக்க ஆஜராகும்படி தோனிக்கு 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், சம்மனை யாரும் பெற்றுக்கொள்ளாததால் திரும்பி வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தோனியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி, ஜூலை 16ஆம் தேதி தோனியை ஆஜர்படுத்தும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இதேபோல் தோனிக்கு எதிராக டெல்லி, பெங்களூரு, புனே மற்றும் சில நகரங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.