Published:Updated:

ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு செல்வது யார்?: சென்னை- பஞ்சாப் இன்று பலப்பரீட்சை

மும்பை: ஐ.பி.எல். ஏழாவது சீசனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியி‌ல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது. வெளியேற்றச்சுற்றில் மும்பை இண்டியன்ஸ் அணியை தோற்கடித்து இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்திற்கு சென்னை அணி தகுதி பெற்றது.

முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வியடைந்த பஞ்சாப் அணியை எதிர்த்து, இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சென்னை அணி விளையாடுகிறது.

ஏற்கனவே நடைபெற்ற பஞ்சாப் அணியுடனான லீக் சுற்று ஆட்டங்கள் இரண்டிலும் சென்னை அணி தோல்விடைந்துள்ளது. இரண்டு போட்டிகளிலும் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டம் சென்னை அணியை நிலை குலைய வைத்தது. இரு போட்டிகளிலும் 90 ரன்களுக்கு மேல் அவர் குவித்தார்.

இதனால் போட்டியில் மேக்ஸ்வெல்லின் அதிரடியை கட்டுப்படுத்தும் வியூகங்களை சென்னை அணி வகுத்து வருகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் ஒன்றாம் தேதி பெங்களூருவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.