Published:Updated:

கனவு அணியில் சச்சின், சேவாக், கபில், கவாஸ்கர்!

துபாய், ஜூலை 19,2011

ஐசிசியின் உலக கனவு டெஸ்ட் அணியில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கபில் தேவ் மற்றும் கவாஸ்கர் ஆகிய நால்வர் இடம்பெற்றுள்ளனர். ##~~##

இந்தியா - இங்கிலாந்து இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் 2000 ஆவது போட்டியாக அமையவுள்ளது.

இதனை முன்னிட்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மிகச் சிறந்த வீரர்களின் உலக அணியை தேர்வு செய்தது. இதற்காக இணையதளம் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் வாக்களிக்க வழிவகுக்கப்பட்டது.

இந்த கனவு அணியில் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கபில் தேவ் மற்றும் கவாஸ்கர் ஆகிய நால்வர் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசி டெஸ்ட் கனவு அணி விவரம்:

சேவாக்
கவாஸ்கர்
டெண்டுல்கர்
கபில்தேவ்
பிராட்மேன்
லாரா
கில்கிறிஸ்ட்
வார்னே
மெக்ராத்
வாசிம் அக்ரம்
அம்புரோஸ்