Published:Updated:

ஐபிஎல் கிரிக்கெட்: மேக்ஸ்வெல் அதிரடியில் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

Vikatan Correspondent

கட்டாக்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 90 ரன் குவித்தார்.

கட்டாக்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, அதிரடியாக விளையாடி ரன் சேகரித்தது. 20 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது.

க்ளைன் மேக்ஸ்வெல் 38 பந்துகளில் 8 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உட்பட 90 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கடின இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது. கடைசிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடிய டுப்ளஸ்ஸி 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் மட்டும் எடுத்து, தோல்வி அடைந்தது. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியிலும் பஞ்சாப் அணியிடம், சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்திருந்தது.

இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.