Published:Updated:

லலித் மோடி வருகையால் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் கலைப்பு: பிசிசிஐ அதிரடி!

மும்பை: ஐ.பி.எல் கிரிக்கெட் முறைகேடு குற்றச்சாட்டில் ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் தலைவர் லலித் மோடி, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை பிசிசிஐ கலைத்துள்ளது.

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு ஐபிஎல் கிரிக்கெட் முறைகேடு புகாரில் ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் தலைவர் லலித் மோடி போட்டியிட்டார்.

லலித் மோடி போட்டியிடுவதற்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், லலித் மோடி போட்டியிட தடை விதிக்க மறுத்ததோடு, தேர்தல் முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்வு முடிவு இன்று அறிவிக்கப்பட்டது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட லலித் மோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் கலைப்பு

இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை கலைப்பதாக அறிவித்துள்ள பிசிசிஐ, ராஜஸ்தான் கிரிக்கெட் நடவடிக்கையை கவனித்துக் கொள்வதற்காக தற்காலிக கமிட்டி  ஒன்றை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பி.சி.சி.ஐ.யின் இந்த அதிரடி முடிவு காரணமாக, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்குள் லலித் மோடி உள்ளே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.