Published:Updated:

இந்தியாவில் ஐபிஎல் போட்டி தொடக்கம்: சென்னை- கொல்கத்தா இன்று மோதல்

Vikatan Correspondent
இந்தியாவில் ஐபிஎல் போட்டி தொடக்கம்: சென்னை- கொல்கத்தா இன்று மோதல்
இந்தியாவில் ஐபிஎல் போட்டி தொடக்கம்: சென்னை- கொல்கத்தா இன்று மோதல்
இந்தியாவில் ஐபிஎல் போட்டி தொடக்கம்: சென்னை- கொல்கத்தா இன்று மோதல்

ராஞ்சி: 7வது ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகள் இன்று இந்தியாவில் தொடங்குகிறது.

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற முதற்கட்ட லீக் போட்டிகள் நேற்று முன்தினம் முடிவடைந்தன. ஐக்கிய அரபு நாடுகளில் மொத்தம் 20 போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு அணியும் தலா 5 போட்டிகளில் விளையாடின.
பஞ்சாப் அணி விளையாடிய 5 போட்டியிலும் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சென்னை அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஐ.பி.எல் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகள் இன்று இந்தியாவில் தொடங்குகிறது.

ராஞ்சியில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் 36 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

இறுதிப் போட்டி மும்பையில் ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.