Published:Updated:

கிரிக்கெட்: 100வது சதம் பற்றி சிந்திக்காத சச்சின்!

கிரிக்கெட்: 100வது சதம் பற்றி சிந்திக்காத சச்சின்!
கிரிக்கெட்: 100வது சதம் பற்றி சிந்திக்காத சச்சின்!

லண்டன்,ஜூலை 13,2011

கிரிக்கெட்: 100வது சதம் பற்றி சிந்திக்காத சச்சின்!

நூறாவது சதம் அடிப்பது பற்றி சிந்திக்கவில்லை என்று இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். ##~~##

சாதனை மேல் சாதனை படைத்து வரும் சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் சேர்த்து 99 சதங்களை குவித்துள்ளார்.

விரைவில் நடைபெற உள்ள இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்டில் அவர் தனது 100வது சதத்தை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லார்ட்சில் நடைபெறும் இந்த போட்டி கிரிக்கெட் வரலாற்றின் 2000-வது போட்டி என்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

இந்நிலையில் இங்கிலாந்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சச்சின், 100வது சதத்தை அடிப்பது பற்றி தாம் யோசிக்கவில்லை என்றும், இங்கிலாந்து தொடரில் சிறப்பாக ஆடுவதிலேயே கவனம் செலுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.

சச்சின் எப்போதுமே தனது தனிப்பட்ட சாதனைகளை பெரிதாக கருதுவதில்லை என்பது கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரது கருத்து.