Published:Updated:

ஐ.எஸ்.எல். லீக் போட்டி: கொச்சி கால்பந்து அணியை சச்சின் வாங்க வேண்டுகோள்!

Vikatan Correspondent
ஐ.எஸ்.எல். லீக் போட்டி: கொச்சி கால்பந்து அணியை சச்சின் வாங்க வேண்டுகோள்!
ஐ.எஸ்.எல். லீக் போட்டி: கொச்சி கால்பந்து அணியை சச்சின் வாங்க வேண்டுகோள்!
ஐ.எஸ்.எல். லீக் போட்டி: கொச்சி கால்பந்து அணியை சச்சின் வாங்க வேண்டுகோள்!

கொச்சி: ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் கொச்சி அணியை சச்சின் டெண்டுல்கர் வாங்க வேண்டும் என்று உலக மலையாள கால்பந்து ரசிகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியன் சூப்பர் ’லீக்’ கால்பந்து போட்டி தொடர் வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் போல அணிகள் விற்கப்படுகின்றன.

பெங்களூர், சென்னை, டெல்லி, கோவா, கொச்சி, கொல்கத்தா, மும்பை, புனே ஆகிய 9 நகரங்கள் கொண்ட அணி உள்ளன. இதில் 8 மணிகள் தேர்வு செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வரும் 13ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்த அணிகளை வாங்க முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், பெரிய நிறுவனங்கள் களத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கொச்சி கால்பந்து அணி உரிமத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாங்க வேண்டும் என்று உலக மலையாள கால்பந்து ரசிகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் கால்பந்து போட்டி பிரபலமாக வேண்டும். அதற்காக இந்த போட்டி நடத்தப்படுகிறது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சச்சின் டெண்டுல்கர் பங்களிப்பை அளித்தால் கால்பந்து இந்தியாவில் மிகவும் பிரபலம் ஆகும். கொச்சி அணியை தெண்டுல்கர் வாங்க வேண்டும் என்று மலையாள ரசிகர்கள் விரும்புகிறார்கள். இதனால் கொச்சி அணியின் மதிப்பு உயரும்" என்று கூறப்பட்டுள்ளது.