Published:Updated:

20-20 மகளிர் உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய சாம்பியன்!

Vikatan Correspondent
20-20 மகளிர் உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய சாம்பியன்!
20-20 மகளிர் உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய சாம்பியன்!
20-20 மகளிர் உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய சாம்பியன்!

மிர்புர்: மிர்புரில் நடைபெற்ற 20-20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

2009 ஆம் ஆண்டு முதன்முறையாக நடைபெற்ற 20 ஓவர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி, 2012ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் முனைப்புடன் இங்கிலாந்து அணி விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்தது.

அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 15.1 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து வெற்றி பெற்றது. இதில், ஆஸ்திரேலிய மகளிர் அணியில் அதிகபட்சமாக லேனிங் 44, பெர்ரி 31 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி ஹாட்ரிக் பட்டம் வென்றுள்ளது.