Published:Updated:

உலக கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 173 ரன்கள் இலக்கு!

உலக கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 173 ரன்கள் இலக்கு!
உலக கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 173 ரன்கள் இலக்கு!
உலக கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 173 ரன்கள் இலக்கு!

மிர்பூர்: 20 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற 173 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்தது. இதன் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.

தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டு பிளஸ்ஸிஸ் 58 ரன்களும், டுமினி 45 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி வீரர்கள் அஸ்வின் 3 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, அடுத்து களமிறங்கும் இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 173 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.