Published:Updated:

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து வெளியேற்றம்- அரையிறுதியில் இலங்கை

சிட்டகாங்: சிட்டகாங்கில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அரையிறுதிக்கு சென்றது. படுதோல்வி அடைந்த நியூசிலாந்து போட்டியில் இருந்து வெளியேறியது.

முதலில் விளையாடிய இலங்கை அணி 119 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜெயவர்த்தனே 25 ரன்னும், திரிமன்னே 20 ரன்னும், சென்நாயகே 17 ரன்னும், பெரைரா, மற்றொரு பெரைரா ஆகியோர் தலா 16 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒன்றை இலக்கு ரன்னில் வீழ்ந்தனர்.

நியூசிலாந்து தரப்பில் போல்ட், நீஷாம் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 15.3 ஓவரில் 60 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக தொடக்க வீரர் வில்லியம்சன் 42 ரன் எடுத்தார். 3 பேர் டக் அவுட் ஆனார்கள். 5 பேர் ஒன்றை இலக்கு ரன்னில் வீழ்ந்தனர்.

இலங்கை வீரர் ஹெராத் 3.3 ஓவர்கள் வீசி 2 மெய்டனும், 3 ரன்னும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சென்னநாயகே 2 விக்கெட் கைப்பற்றினார். ஆட்டநாயகனாக ஹெராத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குரூப் 1 பிரிவில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் இலங்கை அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2 வெற்றி, 2 தோல்வியுடன் நியூசிலாந்து அணி போட்டியில் இருந்து வெளியேறியது.