Published:Updated:

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: கத்துக்குட்டியிடம் சரணடைந்த இங்கிலாந்து!

சிட்டகாங்: சிட்டகாங்கில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கத்துக்குட்டி அணியான நெதர்லாந்திடம், இங்கிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பெர்ஷி 48 ரன்னும், மைபுர்க் 39 ரன்னும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 17.4 ஓவரில் 88 ரன்னுக்கு சுருண்டது. இதனால் 45 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக பேபரா 18 ரன்னும், ஹாலிஸ் 12 ரன்னும், ஜோர்டான் 14 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒன்றை ரன் இலக்குடன் வீழ்ந்தனர்.

நெதர்லாந்து தரப்பில் புகாரி, பீக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். புகாரி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து அணி விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் வெற்றியும், மூன்றில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.