Published:Updated:

இந்தியா, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 7வது ஐ.பி.எல் போட்டி!

Vikatan Correspondent
இந்தியா, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 7வது ஐ.பி.எல் போட்டி!
இந்தியா, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 7வது ஐ.பி.எல் போட்டி!
இந்தியா, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 7வது ஐ.பி.எல் போட்டி!

மும்பை: 7வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, முதல் பகுதி ஆட்டங்கள் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது.

மே 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 2ஆம் பகுதி ஆட்டங்கள் வங்கதேசம் அல்லது இந்தியாவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 12ஆம் தேதிக்கு பின்னர் நடைபெறும் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.