Published:Updated:

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கைக்கு 265 ரன்கள் இலக்கு!

Vikatan Correspondent
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கைக்கு 265 ரன்கள் இலக்கு!
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கைக்கு 265 ரன்கள் இலக்கு!
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கைக்கு 265 ரன்கள் இலக்கு!

பாதுல்லா: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு தவான் 94 ரன்களுடன் ஆட்டமிழந்த நிலையில், இலங்கை அணிக்கு 265 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்த பணித்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக தவான்- ரோகித் சர்மா களம் இறங்கினர். 13 ரன் எடுத்தி்ருந்த ரோகித், செனநாயகே பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார்.

இவரைத் தொடர்ந்து கேப்டன் கோலி- தவானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியின் ரன் விகிதத்தை உயர்த்தியது. அபாரமாக விளையாடி வந்த கோலி அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மெண்டீஸ் பந்தில் போல்ட் ஆனார். 51 பந்தில்48 ரன் எடுத்த கோலி, 4 பவுண்டரி, ஒரு சி்க்சர் விளாசினார். மறுமுனையில் அபாரமாக விளையாடி வரும் தவான் தனது 5வது அரை சதத்தை அடித்தார்.

பின்னர் ரஹானே களம் இறங்கினார். இவர் தவானுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வந்தார். 22 ரன் எடுத்திருந்தபோது செனநாயகே பந்தில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து, ராயுடு களம் இறங்கினார்.

இந்நிலையில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தவான், மெண்டீஸ் பந்தில் 94 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் மெண்டீஸ் பந்திலேயே 2 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதனைத் தொடர்ந்து பெரேரா பந்தில் 18 ரன்களில் ஆட்டமிழந்தார் ராயுடு. அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பின்னி ரன் ஏதும் எடுக்காமலேயே செனநாயகே பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அஸ்வின் 18 ரன்களில் மலிங்கா பந்தில் ஆட்டமிழந்தார்.இதனையடுத்து களமிறங்கிய புவனேஸ் குமார் ரன் ஏதும் எடுக்காமலேயே, மெண்டீஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மொகமத் ஷாமி களமிறங்கினார். அவர்  வந்த வேகத்திலேயே அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார். ,

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்களை எடுத்து, 265 ரன்களை இலங்கைக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ரவிந்திர ஜடேஜா 22 ரன்களுடனும், ஷாமி 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.