Published:Updated:

ஆசிய கோப்பை கிரிக்கெட்: சங்கக்கரா- திரிமன்னே அரை சதம்!

Vikatan Correspondent
ஆசிய கோப்பை கிரிக்கெட்: சங்கக்கரா- திரிமன்னே அரை சதம்!
ஆசிய கோப்பை கிரிக்கெட்: சங்கக்கரா- திரிமன்னே அரை சதம்!
ஆசிய கோப்பை கிரிக்கெட்: சங்கக்கரா- திரிமன்னே அரை சதம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, 30 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்துள்ளது. சங்கக்கரா- திரிமன்னே அரை சதம் அடித்தனர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர் பெரைரா 14 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் திரிமன்னேவுடன், சங்கக்கரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறி வருகின்றனர்.

திரிமன்னே அபாரமாக விளையாடி தனது 7வது அரை சதத்தை அடித்தார். மறுமுனையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சங்கக்கரா தனது 84வது அரை சதத்தை விளாசினார். 67 ரன் எடுத்திருந்தபோது உமர்குல் பந்தில் சங்கக்கரா ஆட்டம் இழந்தார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.

தற்போது இலங்கை அணி 32 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பின்றி 190 ரன்கள் எடுத்துள்ளது. திரிமன்னே 93 ரன்னிலும், ஜெயவர்த்தனே ஒரு ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் தரப்பில் உமர் குல் 2 விக்கெட்டை கைப்பற்றினார்.