Published:Updated:

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்: சங்கக்கரா இரட்டை சதம்

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்: சங்கக்கரா இரட்டை சதம்
வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்: சங்கக்கரா இரட்டை சதம்
வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்: சங்கக்கரா இரட்டை சதம்

சிட்டகாங்: வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் சங்கக்கரா இரட்டை சதம் விளாசினார். இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 402 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கவ்ஷல் சில்வா (11), கருணாரத்னே (31) நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து மூத்த வீரர்கள் சங்கக்கராவும், மஹேலா ஜெயவர்த்தனேவும் இணைந்து, வங்காளதேசத்தின் சுழல் தாக்குதலை சமாளித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நேர்த்தியாக ஆடிய சங்கக்கரா பவுண்டரி அடித்து தனது 34வது சதத்தை பூர்த்தி செய்தார். வங்கதேசத்திற்கு எதிராக அவரது 6வது சதமாகும்.

அணியின் ஸ்கோர் 227 ரன்களாக உயர்ந்த போது, ஜெயவர்த்தனே 72 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். சன்டிமால் (27), கேப்டன் மேத்யூஸ் (5) இருவரும் கடைசி நேரத்தில் ஆட்டம் இழந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 92 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது.

##~~##
சங்கக்கரா 160 ரன்களுடனும், விதநாகே ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். சங்கக்கரா அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் சுனில் கவாஸ்கர், பிரையன் லாரா ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இன்று 2வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. சங்கக்கரா அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். விதானேக் 35 ரன்னில் ஆட்டம் இழந்தார். தற்போது இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 402 ரன்கள் எடுத்துள்ளது. சங்கக்கரா 201 ரன்னுடன் களத்தில் உள்ளார்.