Published:Updated:

மும்பை டெஸ்ட்: 9 விக்கெட்டுகளை இழந்து மே.தீவு அணி திணறல்!

மும்பை டெஸ்ட்: 9 விக்கெட்டுகளை இழந்து மே.தீவு அணி திணறல்!
மும்பை டெஸ்ட்: 9 விக்கெட்டுகளை இழந்து மே.தீவு அணி திணறல்!
மும்பை டெஸ்ட்: 9 விக்கெட்டுகளை இழந்து மே.தீவு அணி திணறல்!

மும்பை: மும்பையில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்று முதலில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, மேற்கிந்திய தீவு அணியின் தொடக்க வீரர்கள் கெயில் - போவெல் இன்னிங்சை தொடங்கினர்.

11 ரன் எடுத்திருந்த கெய்ல், முகமது சமி பந்தில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து பிராவோ களம் இறங்கினார். இவர் தனது பங்கிற்கு 29 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் சாமுவேல்ஸ், போவெல்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை.

48 ரன் எடுத்திருந்த போவெல், ஓஜா பந்தில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து சாமுவேஸ் 19 ரன்னில் வீழ்ந்தார். இவரது விக்கெட்டையும் ஓஜா கைப்பற்றினார்.  சந்தர்பால் 25  ரன் எடுத்திருந்தபோது புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டம் இழந்தார்.

இதைத்  தொடர்ந்து 21 ரன் எடுத்திருந்த டியோநரின், அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் களம் இறங்கிய கேப்டன் சமி டக் அவுட் ஆனார். இவரது விக்கெட்டையும் அஸ்வின் வீழ்த்தினார். ஷில்லிங்ஃபோர்ட்  வந்த வேகத்தில் வெளியேறினார். பெஸ்டும் ரன் எதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

##~~##
தற்போது மேற்கிந்திய தீவு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது.  ராம்டின் 1 ரன்னிலும், கபிரியேல் ரன் எதும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.
இந்திய தரப்பில் ஓஜா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், முகமது சமி, புவனேஸ்வர்குமார் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.