Published:Updated:

அரசு நிலத்தை ஒப்படைக்க கங்குலிக்கு SC உத்தரவு

புதுடெல்லி, மே 26,2011

மேற்கு வங்க அரசிடம் குறைந்த விலையில் வாங்கிய நிலத்தை திரும்ப ஒப்படைக்க, கிரிக்கெட் வீரர் செளரவ் கங்குலிக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ##~~##

கடந்த 2000-ல் சால்ட் லேக் பகுதியில் பள்ளி ஒன்றை கட்டுவதற்காக, மேற்கு வங்க அரசிடம் இருந்து ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கினார் கங்குலி.

உண்மையான மதிப்பைக் காட்டிலும் அதிக மடங்குகள் குறைவான தொகையில் நிலம் வாங்கப்பட்டதால், அது தொடர்பான ஒப்பந்தத்துக்கு உள்ளூர்வாசிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

இந்த நிலையில், மேற்கு வங்க அரசிடம் இருந்து வாங்கிய நிலத்தை இரண்டு வாரங்களுக்கு கங்குலி திரும்ப ஒப்படைக்க நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர்.

மேலும், கங்குலியிடம் இருந்து வாங்கப்பட்ட ரூ.20 லட்சம் தொகையை அவரிடம் அரசு திருப்பி அளித்திட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர்.