Published:Updated:

``இதுவரைக்கும் 21 முறை கொரோனா டெஸ்ட் எடுத்துட்டேன்!'' - புலம்பும் ஐபிஎல் வீரர்!

ஐபிஎல்
ஐபிஎல்

இந்த நியூநார்மல் பயிற்சிகள், கொரோனா சோதனைகள் எப்படியிருக்கிறது என ஐபிஎல் வீரர் ஒருவரிடம் பேசினேன்.

செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்குகிறது ஐபிஎல் 2020. புதிய ஸ்பான்ஸர், புதிய விதிமுறைகள், பார்வையாளர்கள் கிடையாது என இது இதுவரையில் இல்லாத ஐபிஎல்-ஆக இருக்கப்போகிறது.

இப்போது 8 அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தங்களின் ஃப்ரான்சையின் ஹோம் கிரவுண்டில் பயிற்சிபெற்றுவருகின்றன. தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சிலர் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

IPL
IPL

ஆர்சிபி வீரர்கள் பெங்களூருவில் பயிற்சிபெற்றுவருகிறார்கள் எனப் பயிற்சிகள் முழு வேகத்தில் நடந்துவருகின்றன. இந்நிலையில் நியூநார்மல் பயிற்சிகள், கொரோனா சோதனைகள் எப்படியிருக்கிறது என ஐபிஎல் வீரர் ஒருவரிடம் பேசினேன்.

தோனி இந்திய அணிக்குள் எப்படி வந்தார், அவரைக் கொண்டுவந்தது யார்?! #Dhoni

"துபாய்க்கு செல்வதற்கு முன்பாகவே 5 முறை கொரோனாவைக் கண்டறியும் பிசிஆர் டெஸ்ட் எடுக்கவேண்டும் என சொல்லியிருந்தார்கள். ஆனால், நான் இதுவரை மட்டுமே 21 முறை பல்வேறு காரணங்களுக்காக கொரோனா டெஸ்ட் எடுத்துவிட்டேன். ஒவ்வொருமுறையும் என்ன ரிசல்ட் வரப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்வதே பெரிய த்ரில்லாக இருக்கிறது. இதோடு துபாய் போனதும் தொடர்ந்து மூன்று டெஸ்ட்கள் எடுக்கப்பட்டு மூன்று முறையும் நெகட்டிவ் வந்தால் மட்டுமே பயோசெக்யூர் வளையத்துக்குள் அனுமதி கிடைக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது. இதுத்தவிர ஐபிஎல் விளையாடும்போது 5 நாள்களுக்கு ஒருமுறை டெஸ்ட் எடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்'' என்றார்.

IPL
IPL

இதற்கிடையே நேற்று தொடங்கியிருக்கும் கரீபியன் பிரிமியர் லீகில் டக் அவுட்டில் வீரர்களுக்கிடையே சமூக இடைவெளியெல்லாம் பின்பற்றப்படவில்லை. கைகுலுக்கக்கூடாது என சொல்லப்பட்டும் வீரர்கள் விக்கெட் விழும்போது கட்டிப்பிடித்தெல்லாம் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஐபிஎல்-ல் இதுபோன்ற விதிமீறல்கள் எல்லாம் இருக்காது என்கிறது பிசிசிஐ தரப்பு.

அடுத்த கட்டுரைக்கு