Published:Updated:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: மன்சூர் சதம்; பாகிஸ்தான் ரன் குவிப்பு

அபுதாபி: அபுதாபியில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் வீரர் மன்சூரின் அபார சதத்தால் அந்த அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் குவித்து வலுமான நிலையில் உள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா தொடக்க நாளில் 8 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், 2வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அம்லா 118 ரன் குவித்தார்.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை பாகிஸ்தான் சிறப்பாக தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் குர்ரம் மன்சூரும், ஷான் மசூத்தும் முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் குவித்தனர். அறிமுக வீரர் மசூத் 75 ரன்களிலும், அசார் அலி 11 ரன்களிலும், யூனிஸ்கான் 1 ரன்னிலும் வெளியேறினர்.

##~~##
இதன் பின்னர் மன்சூரும், கேப்டன் மிஸ்பா உல் ஹக்கும் ஜோடி சேர்ந்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். 27 வயதான மன்சூர் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்தார். ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது.
மன்சூர் 131 ரன்களுடனும், மிஸ்பா 44 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.