Published:Updated:

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: சன்ரைசர்ஸை வெளியேற்றிய மழை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: சன்ரைசர்ஸை வெளியேற்றிய மழை!
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: சன்ரைசர்ஸை வெளியேற்றிய மழை!

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: சன்ரைசர்ஸை வெளியேற்றிய மழை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: சன்ரைசர்ஸை வெளியேற்றிய மழை!

ஆமதாபாத்: கனமழையால் அரையிறுதி போட்டி ரத்து செய்யப்பட்டதால் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி வெளியேற்றப்பட்டது.

5வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆமதாபாத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்க இருந்த 17வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) ஹைதராபாத் சன் ரைசர்ஸ்-பிரிஸ்பேன் ஹீட்ஸ் (ஆஸ்திரேலியா) அணிகள் மோத இருந்தன.

ஆட்டம் தொடங்கும் முன்பே மழை புகுந்து ஏகத்துக்கும் விளையாடி விட்டதால் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்பட்டன.

##~~##
இந்த ஆட்டத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்தால் தான் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற லேசான வாய்ப்புடன் ஆடிய ஹைதராபாத் அணியின் கனவு மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
 
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு