Published:Updated:

சீனிவாசனுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!

சீனிவாசனுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!
சீனிவாசனுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!
சீனிவாசனுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு சீனிவாசன் மீண்டும் போட்டியிடுவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரியும், பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசனின் மருமகனுமான மெய்யப்பன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சீனிவாசனுக்கு எதிர்ப்பு வரவே பி.சி.சி.ஐ தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார். தற்காலிக தலைவராக ஜக்மோகன் டால்மியா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், வரும் 29ஆம் தேதி சென்னையில் நடக்கும் பி.சி.சி.ஐ பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிட சீனிவாசன் முடிவு செய்துள்ளார்.

##~~##
இதனிடையே,  சூதாட்டப் புகார் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், சீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட தடை விதிக்க வேண்டும் என பீகார் கிரிக்கெட் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள பட்நாயக் தலைமையிலான அமர்வு வரும், 27ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.