Published:Updated:

ஆஷஸ் 2வது டெஸ்ட்: 128 ரன்னில் சுருண்டு ஆஸ்திரேலியா பாலோ ஆன்

ஆஷஸ் 2வது டெஸ்ட்: 128 ரன்னில் சுருண்டு ஆஸ்திரேலியா பாலோ ஆன்
ஆஷஸ் 2வது டெஸ்ட்: 128 ரன்னில் சுருண்டு ஆஸ்திரேலியா பாலோ ஆன்
ஆஷஸ் 2வது டெஸ்ட்: 128 ரன்னில் சுருண்டு ஆஸ்திரேலியா பாலோ ஆன்

லண்டன்: லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியை 128 ரன்னில்  சுருட்டு பாலோ ஆன் ஆனது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் (18ஆம்  தேதி) தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி இயான் பெல்லின் (109) சதத்தின் உதவியுடன் தொடக்க நாளில் 7 விக்கெட்டுக்கு 289 ரன்கள் சேர்த்தது.

இந்த நிலையில் 2வது நாள் ஆட்டம் நேற்று (19ஆம் தேதி) நடந்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 361 ரன்கள் குவித்தது. கடைசி கட்ட பேட்ஸ்மேன்கள் ஸ்டூவர்ட் பிராட் 33 ரன்களும், ஸ்வான் 28 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ரையான் ஹாரிஸ் 5 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவன் சுமித் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அடுத்து ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சை ஷேன் வாட்சனும், கிறிஸ் ரோஜர்சும் தொடங்கினர். துரிதமான தொடக்கம் தந்த வாட்சன் 30 ரன்னில் பிரிஸ்னனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதன் பின்னர் ஆஸ்திரேலியா, எதிரணியின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை மளமள வென தாரை வார்த்தது. பாலோ ஆன் ஆபத்தை தவிர்க்க 162 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதை கூட ஆஸ்திரேலியாவினால் தொட முடியவில்லை.

ரோஜர்ஸ் (15), பிலிப் யூக்ஸ் (1), உஸ்மான் கவாஜா (14), ஸ்டீவன் சுமித் (2), கேப்டன் மைக்கேல் கிளார்க் (28), ஆஷ்டன் அகர் (2), பீட்டர் சிடில் (2), பிராட் ஹேடின் (7), ரையான் ஹாரிஸ் (10) உள்ளிட்ட அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து, அணிவகுத்து நடையை கட்டினர்.  முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 53.3 ஓவர்களில் 128 ரன்களுக்கு சுருண்டு பாலோ ஆன் ஆனது. இந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மோசமான ஸ்கோர் இதுவாகும்.

##~~##
இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் 5 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் ஓர் இன்னிங்சில் 5 விக்கெட் எடுப்பது இது 16வது முறையாகும். பிரிஸ்னன் 2 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு பாலோ ஆன் வாய்ப்பை கொடுக்காமல் 233 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 31 ரன்கள் எடுத்திருந்தது. மூன்று விக்கெட்டுகளையும் பீட்டர் சிடில் வீழ்த்தினார். இங்கிலாந்து இதுவரை 264 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருக்கிறது. 3வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.