Published:Updated:

பாகிஸ்தான் - மேற்கிந்திய தீவு 3வது போட்டி 'டை'

பாகிஸ்தான் - மேற்கிந்திய தீவு 3வது போட்டி 'டை'
பாகிஸ்தான் - மேற்கிந்திய தீவு 3வது போட்டி 'டை'
பாகிஸ்தான் - மேற்கிந்திய தீவு 3வது போட்டி 'டை'

கிராஸ் ஜஸ்லெட்: பாகிஸ்தான், மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டையில் முடிவடைந்தது.

செயிண்ட் லுசியாவில் நேற்றிரவு நடந்த 3வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு  229 ரன் எடுத்தது. கேப்டன் மிஸ்பா உல் ஹக் 75 ரன்னும், உமர் அக்மல் 31 பந்தில் 40 ரன்னும் எடுத்தனர். மேற்கிந்திய தரப்பில் பிராவோ, ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டும், கேமர் ரோச், டாரன் சமி தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

230 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மேற்கிந்திய தீவு அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமான இருந்தது. 16 ரன் எடுப்பதற்குள் தொடக்க வீரர்கள் சார்லஸ் (6), அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் (8) ஆட்டம் இழந்தனர். சிறிது நேரத்தில் டாரன் பிராவோ 17 ரன்னில் வெளியேறினார்.

4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாமுவேல்ஸ், லெண்டில் சிம்மன்ஸ் ஜோடி சரிவை தடுத்து பொறுப்புடன் விளையாடியது. சார்லஸ் 46 ரன்னில் இர்பான் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 141 ஆக இருந்தது. லெண்டில் சிம்மன்ஸ் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அணியை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றார். 45.2வது ஓவரில் சிம்மன்ஸ் 75 ரன்னில் அஜ்மல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அதன்பிறகு மேற்கிந்திய தீவு விக்கெட்டுகள் சரிந்தன. டாரன் சமி, நரேன் அதிரடியாக ஆடி ஆட்டம் இழந்தனர். 48வது ஓவரில் அந்த அணி 9 விக்கெட்டை இழந்தது. கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 24 ரன் தேவைப்பட்டது. கடைசி விக்கெட்டான ரோச்- ஹொல்டர் ஜோடி அடித்து விளையாடியது. ஜுனைத்கான் வீசிய 49வது ஓவரில் 9 ரன் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் மேற்கிந்திய தீவு அணியின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது. வகாப் ரியாஸ் வீசிய அந்த ஓவரின் முதல் 2 பந்தில் 2 ரன் எடுக்கப்பட்டது. இதனால் 4 பந்தில் 13 ரன் என்ற நிலை இருந்தது.

3வது பந்தில் ஹோல்டர் பவுண்டரி அடித்தார். 4வது பந்தில் ரன் எடுக்க தவறினார். இதனால் கடைசி 2 பந்தில் 9 ரன் என்ற கடினமான நிலை ஏற்பட்டது. 5வது பந்தில் ஹோல்டர் சிக்சர் அடித்து முத்திரை பதித்தார். கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன் தேவை. பரபரப்பான கடைசி பந்தில் ஹோல்டர் 2 ரன் எடுத்தார். இதனால் ஆட்டம் "டை"யில் முடிந்தது.

##~~##
ரன் அவுட் வாய்ப்பை விக்கெட் கீப்பர் உமர் அக்மல் தவறவிட்டதால் பாகிஸ்தான் அணியின் வெற்றி பறிபோனது. மேற்கிந்திய தீவு அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்தது. ஹோல்டரின் சிறப்பான ஆட்டத்தால் மேற்கிந்திய தீவு அணி தோல்வியில் இருந்து தப்பியது.
பாகிஸ்தான் தரப்பில் ஜுனைத்கான், அஜ்மல் தலா 3 விக்கெட்டும், முகமது இர்பான் 2 விக்கெட்டும், வகாப் ரியாஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்த ஆட்டம் டையில் முடிந்ததன் மூலம் 5 போட்டி கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 4வது ஒருநாள் போட்டி நாளை (21ஆம் தேதி) நடக்கிறது.