Published:Updated:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மீது பயிற்சியாளர் வழக்கு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மீது பயிற்சியாளர் வழக்கு
News
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மீது பயிற்சியாளர் வழக்கு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மீது பயிற்சியாளர் வழக்கு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மீது பயிற்சியாளர் வழக்கு

மெல்போர்ன்: ரூ.22 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மீது முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மிக்கி ஆர்தர் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டு, 2015ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு நியமிக்கப்பட்ட முதல் வெளிநாட்டு தலைமை பயிற்சியாளர் என்ற சிறப்பும் இவருக்கு கிடைத்தது. ஆண்டுக்கு ரூ.இரண்டரை கோடி சம்பளமும், ரூ.1 கோடி வரை போனசும் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் ஆஸ்திரேலிய அணியின் தொடர்ச்சியான தோல்விகள் மற்றும் அணிக்குள் நிலவிய சலசலப்பு காரணமாக கடந்த மாதம் அதிரடியாக நீக்கப்பட்டார். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை மதுபான பாரில் தாக்கிய சம்பவமும் அவரது நீக்கத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது. இதனை வார்னரும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்பாகவே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மிக்கி ஆர்தர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக மெல்போர்ன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், மீண்டும் பணி தர வேண்டும் அல்லது நஷ்ட ஈடாக ரூ.22 கோடி வழங்க வேண்டும்" என்று கேட்டுள்ளார்.

"தான் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் என்பதால் தன்னிடம் இனப்பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாகவும், ஆஸ்திரேலிய நடைமுறைகளை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்றும் வழக்கில் கூறியுள்ளார்.

அத்துடன் அவரது பயிற்சி காலத்தில் ஆஸ்திரேலிய அணிக்குள் நடந்த சண்டையையும் விவரித்துள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்குக்கும், ஷேன் வாட்சனுக்கும் இடையே மிகப்பெரிய விரிசல் இருந்ததாகவும், அப்போது யாருக்கு ஆதரவாக இருப்பது என்பதில் தான் இருதலைகொள்ளி எறும்பு போல் தவித்ததாகவும், வாட்சனை "ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஒரு புற்றுநோய்" என்று கிளார்க் வர்ணித்ததாகவும் குண்டை தூக்கி போட்டுள்ளார்.

##~~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மதுபான பாரில் டேவிட் வார்னர், ஜோ ரூட்டை தாக்கிய விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று சக வீரர் வாட்சன் சொல்லியிருந்தார். இந்த விஷயத்தையும் கிளறியுள்ள ஆர்தர், ஜோ ரூட்டை வார்னர் தாக்கிய விஷயத்தை வாட்சன் தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இந்திய சுற்றுப்பயணத்தின் போது, அணி சரிவில் இருந்து மீள்வதற்கான தகுந்த ஆலோசனைகளை வழங்க தவறிய ஷேன் வாட்சன், மிட்செல் ஜான்சன் உள்பட 4 வீரர்களை மிக்கி ஆர்தரும், கிளார்க்கும் இணைந்து ஒரு போட்டிக்கு சஸ்பெண்ட் செய்தனர். இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனக்கு ஆதரவாக இல்லை என்றும் ஆர்தர் புகார் தெரிவித்திருக்கிறார்.
ஆர்தருக்கு பதிலாக தற்போது ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேரன் லீமான அந்த அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுளார்.